குடும்பத் தகராறில் இளைஞர் ஒருவரை அடித்து கொலை !

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் நேற்று(20) குடும்ப தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28 வயது) எனபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக மனைவியின் சகோதரர் தாக்கியதிலேயே குறித்த நபர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் படுகாயமடைந்தவர் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி இன்று(21) காலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை புல்மோட்டைபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்

Previous articleரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது!
Next articleசிங்கள மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எச்சரிக்கை விடுத்த சரத் வீரசேகர!