வவுனியாவில் கரடி தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

கரடித்தாக்குதலுக்கு இலக்காண பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவுத்தள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய சாஜன்ட் ரணசிங்க என்பவரே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இச் சம்பவமானது, வவுனியா புளியங்குளம் கல்மடு காட்டுப்பகுதியில் இடம் பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தலினை முறியடிக்கும் நோக்கில் பொலிஸ் சாஜன்ட் தலைமையிலான குழு சென்ற போதே அவர் கரடி தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleசிங்கள மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு எச்சரிக்கை விடுத்த சரத் வீரசேகர!
Next articleபெட்ரோலுடன் நாட்டை வந்தடையவுள்ள கப்பல் : மகிழ்ச்சியில் பொதுமக்கள்!