மட்டக்களப்பில் காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்ட கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞர்!

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞர் ஒருவர், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் காதலியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் அம்சவர்தன் என்பவர் கடந்த 16 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த இளைஞன் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார் என குறித்த இளைஞரின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இளைஞன் மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் அப்பகுதி இராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார்.

குறித்த நபர் அவரது காதலியுடன் இங்கு வந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஉறக்கமின்றி எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் திடீர் மரணம்!
Next articleயாழில் திடீரென காணாமல்போன ஆட்டோக்கள் !