பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர் புதிய அறிவிப்பை விடுத்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக அடுத்த வாரம் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் மின் வயர்களை வெட்டிவிட்டு திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவர் கைது!
Next articleஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் பலி : வெளியான காரணம்!