பொலிஸ் உத்தியோகத்தர்களை கட்டியனைத்த ஹிருணிகா!

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் குழுவினர், கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

ராஜபக்சக்களை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளதாகவும், நாட்டின் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியாது எனவும் தெரிவித்து குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லமான கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள ஐந்தாவது பாதை பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய போராட்டத்தின் போதும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஹிருணிகா கட்டியணைத்தார்.

Previous articleஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் பலி : வெளியான காரணம்!
Next articleஅறுவை சிகிச்சையில் விஜயகாந்த்தின் வலது காலில் உள்ள 03 விரல்கள் அகற்றம் : வெளியான காரணம்!