பசறை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டள்ளது.
பண்டாரவளையிலிருந்து லுணுகலை நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, பசறை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட 82 வயதுடைய முதியவர் மீது மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த முதியவர், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.
ஆட்டோ சாரதியை பசறை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.