நடிகை வேதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றால், தான் பாதிக்கப்பட்டிருப்பதாக நடிகை வேதிகா தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘மதராஸி’, ‘சக்கரக்கட்டி’, ‘காளை’, ‘காஞ்சனா 3’, ‘பரதேசி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் வேதிகா. தற்போது, யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘கஜானா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு 2 நாட்களாக கடும் காய்ச்சல்.தயவுசெய்து, லேசான அறிகுறிகளைக்கூட குறைத்து மதிப்பிடாதீர்கள். உடல் வலி, அதிக காய்ச்சலுடன் உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பது சரியானதல்ல. ஏற்கெனவே தொற்று பாதித்திருந்தால் மீண்டும் பாதிக்காது என நினைக்க வேண்டாம். தொற்று வந்த பிறகு வருந்துவதைவிட, பாதுகாப்பாக இருப்பது நல்லது. முகக்கவசம் அணியுங்கள். பாதுகாப்பாக இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous articleஎரிபொருளைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்க : வெளியான புதிய நடைமுறை!
Next articleமட்டக்களப்பில் மின்னல் தாக்கியதால் 30 மாடுகள் பலி!