மட்டக்களப்பில் மின்னல் தாக்கியதால் 30 மாடுகள் பலி!

மின்னல் தாக்கியதால் 30 மாடுகள் பரிதாபமாக உயிரழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் மட்டக்களப்பு – வெல்லாவெளி – தௌவுளானை மேய்ச்சல் தரையில்
இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை அதிகளவு மின்னல் தாக்கங்களும் ஒரு சில பகுதிகளில் மழையும் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌவுளானை மேய்ச்சல் தரை பகுதியில் மரங்களின் கீழ் நின்ற 30மாடுகள் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளன.

குறித்த மேய்ச்சல் தரை பகுதியில் மாடுகளை மேய்க்கும் இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் கஸ்டமான சூழ்நிலையிலும் அன்றாடம் தொழிலுக்காக கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளதன் காரணமாக பல இலட்சம் ரூபா நஸ்டம் கால்நடை பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.