இலங்கையில் இளம் வயதினர் மத்தியில் அதிகரிக்கும் எச்.ஐ.வீ தொற்று!

கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 20 எச்.ஐ.வீ தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 20 முதல் 49 வயது வரையிலானவர்கள்.

கடந்த காலங்களை விடவும் இளம் வயதினர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்து என டொக்டர் ரசாஞ்சலி தெரிவித்துளார்.

இது ஓர் ஆபத்தான நிலை எனவும், கூடுதல் எண்ணிக்கையிலான தொற்றாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சிங்கள ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.

அறிமுகம் இல்லாதவர்களுடன் பாலுறவு கொள்ளும் போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Previous articleவாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம் அடிப்படையில் பெட்ரோல் விநியோகம் : வெளியான புதிய நடைமுறை!
Next articleகிளிநொச்சியில் அழுது புளம்பிய பெண் பதில் அதிபர் : வெளியான காரணம்!