யாழில் எரிபொருள் பங்கீட்டு அட்டை தொடர்பாக மாவட்டச் செயலர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ்.மாவட்டத்தில் எரிபொருளுக்கான பங்கீட்டு அட்டை விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு மாவட்டச் செயலர் க.மகேஸன் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறியுள்ளதாவது, எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

அரச திணைக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அந்தந்த திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை இவ் எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ்.மாவட்டச்செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறும்

மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

Previous articleவவுனியாவில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!
Next articleயாழில் குதிரை வண்டி சேவை ஆரம்பம்!