யாழில் 600 லீற்றர் டீசல் பதுக்கியவர் கைது!

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது.

53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் மின்சாரம் தாக்கியதால் இளைஞன் ஒருவர் பலி!
Next articleவவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!