வவுனியாவில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!

வவுனியா பறனட்டகல் பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் வாகன சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous articleயாழில் 600 லீற்றர் டீசல் பதுக்கியவர் கைது!
Next articleஇலங்கையில் 10 அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனுமதி!