எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு : அதிர்ச்சியில் பொதுமக்கள்!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

2 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 470/- ரூபாவாகும்.

95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாவாகும்.

இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 60 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 460 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசலின் விலை 75 ரூபாவினால் அதிகரித்து, புதிய விலை 520 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளின் விலைகளுக்கு இணையாக உயர்த்தியுள்ளது.

Previous articleஇன்று முதல் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!
Next articleசாரதியை கடத்தி கொன்றுவிட்டு ஆட்டோவை திருடிய நபர் கைது!