யாழில் ஆறு வயது சிறுமியை சீரழித்த மர்ம நபர் : பொலிஸார் வலைவீச்சு!

யாழில் நபர் ஒருவரால் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளவாலை பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றின் போதே உறவினர் ஒருவரால் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் இருந்து அகதியாக சென்ற வயதான தம்பதியினர் ராமேஸ்வர கடற்கரையில் மயங்கிய நிலையில் மீட்பு!
Next articleயாழில் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கனிப்பு!