யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம சேவகர்கள் !

பெட்ரோல் வழங்கப்படுவதில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35 கிராம சேவகர்களும் இன்றைய தினம்(27) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் கிராம சேவையாளர்களுக்கு அத்தியாவசிய சேவை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது.

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களுக்கு மட்டும் எரிபொருள் இதுவரை வழங்கப்படாத நிலையில் அவர்கள் இன்று(27) சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிராம சேவையாளர்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக எரிபொருள் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சுற்றுநிறுபம் மூலம் அனைத்து பிரதேச செயலகங்களுக்கு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதுவரை அவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கூட பிரதேச செயலர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

தமது பிரச்சினைகளை முன்னிறுத்தி வடமராட்சி வடக்கு பிரதேச செயலாருக்கு கிராம சேவகர்கள் அனைவரும் ஒப்பமிட்டு கடிதம் மொன்றை எழுதி அனுப்பியிருக்கிறார்கள்.

தங்களுக்கு தொடர்ந்தும் எரிபொருள் வழங்குவதில் புறக்கணிப்பு இடம்பெற்றால் தாம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கிராம சேவகர்கள் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.