இலங்கை மக்களுக்கு மேலுமொரு அதிர்ச்சித் தகவல்!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் 30 வீதத்தால் அதிகரிக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச கட்டணம் ரூ. 40 என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Previous articleமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு விடுபக்கப்பட்ட தடை !
Next articleஇலங்கையில் மின்வெட்டானது இன்னும் 02 வருடங்களுக்கு தொடரும் : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மின்சார சபையின் பொதுச் செயலாளர்!