யாழில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 20 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயெ இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவன தலைவர்களின் சிபாரிசிற்கு அமைவாக எரிபொருள் விநியோகம் தொடர்பான இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிக்கப்பட்ட சில எரிபொருள் நிலையங்களில் ஜூலை 1ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை மாத்திரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இந்த நாட்களில் வழங்கப்பட மாட்டாது என்பதுடன் வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபெட்ரோல் என சிறுநீரை விற்பனை செய்து தப்பிய நபர்!
Next articleகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவர் பலி : 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்!