பட்டப்பகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் துப்பாக்கிச் சுட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

இதேவேளை, சுமார் ஒரு மாத காலப்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதில் அதிகளவான மரணங்கள் களனி காவல்துறை அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.

Previous articleகந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவர் பலி : 600இற்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்!
Next articleமட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு பெட்ரோல் விநியோகம்!