ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த ? வெளியான தகவல்!

ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலித் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிநாதன் கீத்நாத் தனது ருவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்று காலை அவசர சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன.

மகிந்த ராஜபக்ஷ தற்போது வைத்தியசாலையில் விசேட பிரமுகர் அறையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!
Next articleயாழில் காணாமல் போன முஸ்லிம் சிறுமி : பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு!