யாழில் தொலைபேசிகளை திருடிச்சென்ற வவுனியா இளைஞன் கைது!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் 3 தொலைபேசிகளை திருடிய சந்தேகத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவை சேர்ந்த இளைஞனையே வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் சுழிபுரத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு வந்திருந்தபோதே இவ்வாறு தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மூன்று தொலைபேசிகள் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைதான இளைஞன் இரண்டு தடவைகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்டவர் என்பதுடன் மூன்றாவது தடவை இரண்டு வருடகால சிறைத்தண்டனை பெற்று வந்தநிலையில் ஐந்து மாதங்களின் பின்னர் சிறையில் இருந்து தப்பித்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸார் அவரை இன்றைய தினம் (01-07-2022) நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous articleகிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
Next articleஇலங்கையில பொதுமக்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!