இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்!

இலங்கையில் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு, மின்தடை உட்பட சில காரணங்களாலேயே இந்நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பாரியளவிலான ஆடைத் தொழிற்சாலைகள் லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்தாலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன.

அத்துடன், ஊழியர்கள் வந்து செல்வதற்கு போக்குவரத்து ஏற்பாடுகளும் இல்லை என்பதனால் சிலர் தொழிலை இழக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.