பெட்ரோல் ஒரு லிட்டர் 2500 ரூபா!

கலன் பிந்துனு பிரதேசத்தில் ஒரு போத்தல் பெற்றோல் 2500 ரூபா வரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் பெருமளவு வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சில பகுதிகளில் பெற்றோல் போத்தல் ஒன்று 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறு கள்லச்சந்தையில் எரிபொருள் விற்பனை செய்வோரைத் தேடி பொலிசார் சோதனையிட்ட போதிலும், பல்வேறு வழிகளில் இந்த மோசடி தொடர்கிறதாக பொதுமக்கள் விசன,ம் வெளியிட்டுள்ளனர்.

Previous articleகா.பொ.த. சாதாரணதர விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம்!
Next articleவாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பாடசாலை இயங்கும் : வெளியான அறிவிப்பு!