யாழ். கடலில் இருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்த்தரின் சடலம்!

யாழ்.ஊர்காவற்றுறை கடலில் இருந்து இன்று காலை குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்தபின்னர் கடலுக்கு செல்ல முற்பட்டவேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீனவர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்திருந்தபோது சடலத்தினை கண்டுள்ளார். இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் பொதுமக்களுக்கு முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கை!
Next articleஇரண்டு வாரங்கள் நாடு முடக்கம் ? வெளியான அறிவிப்பு!