முல்லைத்தீவு கடலில் இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் உயிரினங்கள்!

முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதேசமயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், நேற்றும் உயிரிழந்த நிலையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட பாரிய சுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மை நாட்களில் இந்திய இழுவைப்படகுகள் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளால் கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இந்த சுறா மீனும் இந்திய மீனவர்களின் இழுவைப்படகின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Previous articleயாழில் எரிபொருள் நிலையத்தில் தவறி விழுந்து முகாமையாளர் உயிரிழப்பு!
Next articleவவுனியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல்!