தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வயதான இலங்கை தம்பதிகளில் வயோதிப தாய் உயிரிழப்பு!

இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வைத்திய்சாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குறித்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (02-07-2022) இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் முருங்கன் பிட்டி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி மற்றும் சிவன் ஆகிய வயோதிப தம்பதிகள் இருவரும் கடந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்றனர்.

இந்த நிலையில் குறித்த இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சிகிச்சையில் உள்ள இருவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் டாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டதோடு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும் இருவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதால் மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலையில் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற வயோதிப தாய் சிகிச்சை பலனின்றி நேற்று (2) சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதிடீரென நிலத்திற்குள் வந்த கடலலைகள்!
Next articleயாழில் திடீரென சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!