நாட்டில் மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

573 கோவிட் தொற்று உறுதியாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆறு நாட்களில் 71 கோவிட் தொற்று உறுதியளார்கள் பதிவாகியுள்ளனர்.

மீண்டும் கோவிட் தொற்று சமூகத்தில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.

இதுவரையில் கோவிட் நான்காம் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் அதனை ஏற்றிக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

இதுவரையில் நாட்டில் மொத்தமாக சுமார் 64 லட்சம் கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் ஓடும் பேருந்தில் இடம்பெற்ற பயங்கர கொள்ளை சம்பவம் !
Next articleநாடு முழுவதும் நாளை முதல் முழுமையாக தனியார் பேருந்து சேவைகள் முடக்கம்!