பேருந்தில் ஏற முற்பட்ட வயோதிபர் கீழே விழுந்து பலி!

புஸ்ஸல்லாவை பேருந்து தரிப்பு நிலையத்தில் இன்று(03) மதியம் வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பேருந்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது அவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபர் சுகயீனமுற்று இருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் மருந்து பொருட்களைக் கொள்வனவு செய்து வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற முற்பட்டபோதே கீழே விழுந்துள்ளார்.

புஸ்ஸல்லாவை – ஹெல்பொட தோட்ட பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மரணம் தொடர்பாக புஸ்ஸல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleநாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி!
Next articleயாழில் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி!