யாழில் தாயும் மகளும் வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் தலைமறைவு : பொலிஸில் புகார் கொடுத்த கணவர்!

யாழ் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான தாய் மற்றும் 18 வயதான மகளுடன் நோர்வேயிலிருந்து வந்த குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பாக கணவரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மராட்சியில் உள்ள சமூகநிறுவனம் ஒன்றின் வெளிநாட்டு அங்கத்தவராக இருக்கும் குறித்த நோர்வே குடும்பஸ்தர் நோர்வேயில் இருந்த போது கஸ்ட நிலையில் இருந்த தனது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி வந்ததாகவும் தலைமறைவாகியுள்ள மூத்த மகளின் கல்வி நடவடிக்கைக்கு முழுமையான பங்களிப்பு செய்ததுடன் அவளுக்கு லப்டொப் கணனியும் நோர்வே குடும்பஸ்தர் வாங்கிக் கொடுத்ததாகவும் கணவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அத்துடன் மனைவிக்கு நவீன தொலைபேசி ஒன்றை அனுப்பிய போது தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த தொலைபேசியை பறித்து விற்று போது மனைவி தன்னுடன் முரண்பட்டதுடன் சிறிது காலம் தன்னை விட்டு பிள்ளைகளுடன் பிரிந்து இருந்துள்ளார்.

அதோடு தான் இரவில் மது போதையில் இருப்பதை காரணம் காட்டி தன்னுடன் வாழ முடியாது என அயலவர்களுக்கு கூறியதுடன் பொலிசிலும் முறையிட்டதாகவும் கணவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் நோர்வே நபர் தனது மனைவி பிள்ளைகளை வந்து சந்தித்துள்ளார். அப்போது தான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவருடன் முரண்பட்டு தாக்க முற்பட்ட போது மனைவி தன்னை அடித்ததாகவும் கணவர் தெரிவித்தார்.

இதன் பின்னரே தனது மனைவி மூத்த மகளுடன் அவர் தலைமறைவாகிவிட்டார் எனவும் தற்போது இவர்கள் சிங்கப்பூர் சென்று விட்டதாக தனது இரண்டாவது மகனுக்கு அறிவித்தாகவும் கணவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் கணவர் தற்போது தனது 15, 12 வயதான இரு ஆண் பிள்ளைகளுடன் வாழ்வதாகவும் தெரியவருகின்றது.

Previous articleயாழில் றம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி!
Next articleஇன்று முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை !