இன்று முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை !

நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த வாரம் பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்பட்டுள்ள அதேசமயம் இந்த விடுமுறையை மற்றுமொரு விடுமுறை காலத்தில் ஈடு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

Previous articleயாழில் தாயும் மகளும் வெளிநாட்டில் இருந்து வந்தவருடன் தலைமறைவு : பொலிஸில் புகார் கொடுத்த கணவர்!
Next articleயாழில் இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : கவலை தெரிவித்த இளைஞர்!