மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் அவரின் மூத்த புதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பில் அவரின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 30ஆம் திகதி தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் அன்றைய தினம் இது தொடர்பில் பதிவிட்ட மகிந்தவின் முன்னாள் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் காசிலிங்கம் கீத்நாத் குறித்த விடயத்தை மறுத்திருந்தார்.

இதேவேளை இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மகிந்தவின் உடல்நிலை தொடர்பில் நாமல் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நலமுடன் இருப்பதாக நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், முன்னாள் பிரதமர் குறித்து தவறான தகவல் பரப்புவதை நிறுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleயாழில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : படுகாயமடைந்த சாரதி !
Next articleஉயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு!