யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை (04-07-2022) மாலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த இக்கலந்துரையாடல் யாழ் மேலதிக அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தினர், இராணுவத்தினர், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் கலந்து கொண்டனர்.

இதன்போது நீண்ட நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எவ்வாறு எரிபொருட்களை விநியோகிப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் வரும் எரிபொருளை எவ்வாறு விநியோகிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பொதுமக்களுக்கு 72 விதமான எரிபொருட்கள் விநியோகிப்பதாகவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு 28 விதமான எரிபொருள்களை விநியோகிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.

Previous articleஇன்றைய நாள் சாதிக்கபோகும் முக்கிய ராசிக்காரர்! வெளியானது இன்றைய ராசிபலன்!
Next articleயாழ். நாகபூஷணி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட பெளத்த தேரர் !