வாழ வழியின்றி புகையிரதத்தில் கழுத்தை வைத்து இளம் தந்தை தற்கொலை !

மதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார்.

மதவாச்சி புகையிரதத்தில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த சுஜித் தில்ஷான் என்ற 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

குறித்த நபர் கடந்த முதலாம் திகதி இரவு 07.00 மணியளவில் வீட்டில் இருந்து எவ்வித தயக்கமும் இன்றி வந்து மன்னார் வீதி, யகாவெவ புகையிரத கடவையில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரம் சென்று புகையிரதம் வரும் வரை காத்திருந்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற புகையிரதம் எதிரே ஓடி வந்து தண்டவாளத்தில் தலையை வைத்துள்ளார். இதனால் சாரதியினால் அதனை நிறுத்த முடியாமல் போயுள்ளதாக சாரதி தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஎரிபொருள் வரிசையில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு!
Next articleயாழில் கணவன் சேமித்து வைத்த பெட்ரோலை அலுவலக அதிகாரிக்கு கொடுத்த மனைவி : நையப்புடைத்த கணவன் !