யாழில் இளம் குடும்பஸ்த்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 33 வயது பஜிபரன் எனும் இளைஞன் என தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் கொழும்பில் அன்றாட வேலை ஒன்றினை செய்து வந்ததாகவும் தற்போதய சூழ்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தில் பிணக்குகள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

கடந்த சில நாட்களாக மனவேதனையில் புலம்பி திரிந்ததாகவும் பலர் ஆறுதல் சொல்லியும் இன்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் பெட்ரோலுக்கு காத்திருந்த கணவனின் ஆட்டோக்கு பின்னால் பெண் உள்ளாடை : மனைவி கொலை வெறி!!
Next articleயாழில் துணியை வயிற்றுக்குள் வைத்துத் தைத்த வைத்தியர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!