அடுத்த வருடம் மிகவும் கடினமானது! தொடர்ந்து நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுக்கொண்டிருக்கும் ரணில்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும். எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிடம் வழங்கிய நேர்காணலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2023 கடினமானதாகயிருக்கப்போகின்றது. ஆனால் 2024இல் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேமாதம் இலங்கையின் பிரதமராக ஆறாம் தடவையாக தெரிவுசெய்யப்பட்ட 73 வயது தலைவர் நான். மிகவும் வழமைக்குமாறான சூழ்நிலையிலேயே பிரதமராக பதவியேற்றதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டு நாட்கள் அரசாங்கமே இல்லாத நிலை காணப்பட்டது, நிலைமை கையை மீறி போய்க்கொண்டிருந்தது, என தெரிவித்துள்ள பிரதமர் ரணில், முன்னாள் பிரதமர் மகிந்தராஜபக்ச பதவி விலகவேண்டிய நிலையை ஏற்படுத்திய சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.

1948 சுதந்திரத்தின் பின்னர் இலங்கை சந்தித்துள்ள மிகமோசமான நெருக்கடிக்கு தீர்வை காணும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க 22ம் திகதி வரை பெட்ரோல் தட்டுப்பாடு காணப்படும், அக்காலப்பகுதியிலேயே அடுத்த கப்பல் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்தியாவின் கடனுதவியில் இருந்து அல்லது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் வெளிநாட்டு நாணயத்திலிருந்து – சம்பளப்பணத்திலிருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்கின்றோம் என குறிப்பிட்டுள்ள பிரதமர் வெளிநாட்டில் வேலைபார்க்கும் இலங்கையர்களிடமிருந்து சிறிய எண்ணிக்கையே கிடைக்கின்றது ஆனால் சிலவேளைகளில் நாங்கள் பில்லியன் டொலர்களை அல்லது அதற்கும் சற்று அதிகமாக பெறுகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடன்வழங்குநர்களிடமிருந்து நாங்கள் பெற்ற நிதி ஏற்கனவே முடிவடைந்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.