கனடாவில் மூடப்பட்டு வரும் அவசர சிகிச்சைப் பிரிவு : வெளியான காரணம்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மூடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோவின் இரண்டு அவசர சிகிச்சைப் பிரிவுகள் தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டுள்ளன.

மருத்துவ பணியாளர்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டு நிலையினால் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது.

கனடாவின் அனேக பகுதிகளில் மருத்துவப் பணியாளர்களுக்க நிலவி வரும் பற்றாக்குறை நோயாளிகளுக்க சிகிச்சை வழங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றாரியோவின் கிளின்ரனில் அமைந்துள்ள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு கடந்த சனிக்கிழமை ஆளணி பற்றாக்குறையினால் தற்காலிகமாக மூடப்பட்டது.

ஒன்றாரியோவின் பேர்த் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவிட் தொற்று பரவுகை உள்ளிட்ட காரணிகளினால் பணியாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.