குடும்ப தகராற்றில் மனைவியின் உறவினர்களால் வெட்டிக்கொள்ளப்பட்ட கணவர்!

கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற தகராற்றில் மனைவியின் உறவினர்களால் கணவனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்றள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச் சேர்ந்த 38 வயதுடைய கந்தசாமி இளையராஜா என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் சம்பவத்தினமான நேற்றைய தினம் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியதையடுத்து மனைவியின் தம்பி ஆத்திரத்தில் கத்தியால் கணவனை தாக்கியதில் கணவன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் கொலைச்சம்பம் தொடர்பில் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleயாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தந்தையும் மகளும் படுகாயம்!
Next articleபெண் அதிகாரியுடன் கல்லத்தொடர்பு : இரட்டைக் குழந்தைக்கு அப்பாவான எலான் மஸ்க் !