நாட்டில் அனைத்து எரிபொருள் நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

நாட்டில் இடம்பெற்று வரும் அசாதார சூழ்நிலையின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களும் மூடப்படும் வாய்ப்பு உள்ளதாக லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொருளாதார சிக்கலுக்க காரணமான அரசாங்கத்தை பதிவி விலக கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனைத்தொடர்ந்து கொழும்பு பகுதிகளில் இன்றும் நாளையும் பல்வேறு தரப்பினர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில் உள்ளன. இவ்வாறான நிலையிலேயே லங்கா ஐஓசி நிர்வாக இயக்குநர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதன்போது நாட்டில் இடம்பெற்று வரும் அசாரதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டே இவ்வாறான முடிவு எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதுடன், லங்கா ஐஓசி தற்போது பொது மக்களுக்கும் எரிபொருளை விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவவுனியா செட்டிகுளத்தில் புகையிரதத்தை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் : திரும்பிச்சென்ற புகையிரதம்!
Next articleநாளை அனைத்து தனியார் பேருந்துகளும் இயங்காது : வெளியான காரணம்!