நாளை அனைத்து தனியார் பேருந்துகளும் இயங்காது : வெளியான காரணம்!

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நாளை இடம்பெறப்போகும் மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தின் காரணமாக நாட்டில் பேருந்துகள் இயங்காது என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆங்காங்கே இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பொலிஸார் மாற்றுப்பாதையினை பயன்படுத்தி செல்ல சொல்கின்றனர்.

இதனால் அதிகளவான எரிபொருள் செலவாகின்றமையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பேருந்துகளின் நடத்துநர்கள் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருளை மாத்திரமே பெற்றுக்கொள்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

Previous articleநாட்டில் அனைத்து எரிபொருள் நிலையங்களும் மூடப்படும் அபாயம்!
Next articleகொழும்பில் திடீரொன வெடித்த ஆர்ப்பாட்டம் : ஆயிரக்கணக்கில் திரண்ட மாணவர்கள்!