யாழில் பேருந்தின் மிதிப்பலகை உடைந்ததில் ஒருவருக்கு நேர்ந்த நிலை !

யாழில் பேருந்து ஒன்றில் அதிகளவான பயணிகள் மிதிபலகையில் நின்று பயணித்ததால் மிதி பலகை உடைந்து கீழேவிழுந்ததில் ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச்சம்பவமானது நேற்றையதினம் கலை 06 மணியளவில் காரைநகரிலிருந்து பயணித்த 786 வழித்தட இ.போ.ச பேருந்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பேருந்து ஆனைக்கோட்டை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்தின் மிதி பலகை உடைந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தொிவித்துள்ள காரைநகர் இ.போ.ச சாலை முகாமையாளர் குணசிலன் கூறுகையில்,

அதிகளவான மக்கள் பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்தமையே இந்த அனர்த்தத்திற்கு காரணம் என கூறியதுடன்,

மிதி பலகையிலிருந்து பயணம் செய்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் எனவும், பொலிஸாருக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவும் கூறியுள்ளார்.

Previous articleபாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கோட்டாபய : வெளியான தகவல்!
Next articleபாடசாலை விடுமுறை நீட்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!