பாடசாலை விடுமுறை நீட்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஆசிரிய தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

18 ஆம் திகதிக்குப் பின்னர், பாடசாலைகளை நடாத்துவதற்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றுடன் கலந்துரையாடுவதற்கும் போதுமான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்

Previous articleயாழில் பேருந்தின் மிதிப்பலகை உடைந்ததில் ஒருவருக்கு நேர்ந்த நிலை !
Next articleநாட்டை விட்டு வெளியேற தயாராகும் கோட்டாபய!