நாட்டை விட்டு வெளியேற தயாராகும் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டவிட்டு வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ள பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், நிலைமை கைமீறிப் போனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தின் பல்வேறு கோப்புகள் வாகனங்கள் மூலமாக வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

போராட்டத்துக்கு பயந்து எடுத்துச் செல்கின்றார்களா? ஜனாதிபதி தப்பிச் செல்வதற்காக எடுத்துச் செல்கின்றார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதற்கிடையே சிங்கப்பூர் வழியாக வேறொரு நாட்டுக்கு தப்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று பரீட்சார்த்த முயற்சியொன்றை ராஜபக்ஷ தரப்பு மேற்கொண்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Previous articleபாடசாலை விடுமுறை நீட்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Next articleதிடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் : வெளியான அறிவிப்பு!