திடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் : வெளியான அறிவிப்பு!

நாட்டின் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாளை இடம்பெறப்போகும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இன்று இரவு முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நீர்க்கொழும்பு, களனி, கல்கிஸ்ஸ, நுகேகொட, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

குறித்த பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் ஊடரங்கு உத்தரவு காலப்பகுதியில் வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் குறித்த பகுதிகளினூடாக பயணிப்பதை தவிர்க்குமாறும் அவ்வாறு மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleநாட்டை விட்டு வெளியேற தயாராகும் கோட்டாபய!
Next articleயாழில் ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி!