யாழில் ஆரம்பமான அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி!

யாழில் அரசாங்கத்திற்கு எதிராக செக்களில் ஆர்ப்பாட்ட பேரணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.

இந்த குறித்த பேரணியானது “கோட்டா – ரணில் ஆட்சியே வீட்டிற்கு போ” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் மாபெரும் போராட்டமொன்று இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதிடீரென அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் : வெளியான அறிவிப்பு!
Next articleஆர்ப்பாட்டக்காரர்களின் மீது கண்ணீர் புகை பிரயோகம்!