வீதித்தடைகளை உடைத்து முன்னேறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் : பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதி!

நாட்டின் பொருளாதார சிக்கலுக்கு காரணமான அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்று முப்படையினரால் வீதிகளில் போடப்பட்டிருந்து தடைகளை உடைத்து முன்னேறிச்சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை பிரயோகத்தை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொழும்பு காலிமுகத்திடலில் பல்வேறு தரப்பினர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கோட்டா கோ கம பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளார்கள் மற்றும் இதில் மதத்தலைவர்கள், சிவில் அமைப்பினர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு வந்த வண்ணம் உள்ளார்கள்.

இந்நிலையில் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பான இடத்திற்கு இராணுவத்தினர் அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆர்ப்பாட்டக்காரர்களின் மீது கண்ணீர் புகை பிரயோகம்!
Next articleபாடசாலை விடுமுறை நீட்டிப்பு : வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!