தலைக்கவசத்தை எறிந்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

மஹரகமவில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது ஆதரவை வழங்கினார்.

தற்போது நிலவும் நெருக்கடிகள் காரணமாக அரசுக்கு எதிராக பொதுமக்கள் பெரிய அளவில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணொளிக் காட்சிகளின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ்காரர் ஒருவர் மஹரகமவில் இடம்பெற்றுவரும் பொது ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்வதைக் காணமுடிகிறது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட காவலர் பொதுமக்களால் பாராட்டப்பட்டார்.

Previous articleபாடசாலை விடுமுறை நீட்டிப்பு : வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!
Next articleஜனாதிபதி மாளிகைகுள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் : தீவிரமடையும் போராட்டம்!