ஜனாதிபதி மாளிகைகுள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் : தீவிரமடையும் போராட்டம்!

ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

அனைத்து தடைகளையும் உடைத்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் வாயில்களை அடைந்துள்ளனர்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியுள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயில்கள் போராட்டக்காரர்களின் முற்றுகைக்குள் வந்துள்ளது.

இந்த நிலையில் பொல்லுகளுடன் கடற்படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous articleதலைக்கவசத்தை எறிந்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்!
Next articleதுப்பாக்கிச்சூட்டில் பலியான முன்னாள் பிரதமர்!