ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டையும் பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள நீச்சல் குளம், அறைகள் மற்றும் பல்வேறு வசதிகளை போராட்டக்காரர்கள் ரசிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் கண்டெடுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான காணொளி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் சொகுசு கார்கள் மற்றும் எஸ்யூவிகள் உள்ளடங்கும்.

Previous articleநாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சரமாறி தாக்குதல் : ஆக்ரோசத்தின் உச்சத்தில் மக்கள்!
Next articleசற்று முன் எதிர்க்கச்சித் தலைவர் சஜித் வைத்தியசாலையில் அனுமதி!