யானை தாக்குதலுக்கு இலக்காண விவசாயி ஒருவர் பலி!

வயலில் காவலுக்கு இருந்த விவசாயி ஒருவரை காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று இரவு மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு கிராமத்தில்
இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இருநூறுவில் – உன்னிச்சை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய கருணாகரன் என்பவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்றையதினம் தனது வீட்டிலிருந்து கண்டியனாறு பிரதேசத்தில் உள்ள தனது வயலினை பராமரித்து காவலில் இருந்துள்ளார்.

இதன்போது திடீரென வயலினுள் நுளைந்த காட்டு யானை குறித்த நபரினை தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அயலில் உள்ள வயல் காவலில் இருந்த விவசாயிகளால் மீட்டெடுத்து தாண்டியடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் எரிபொருள் விநியோகம் !
Next articleஅரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞன் பலி!