இன்று முதல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு : வெளியான அறிவிப்பு!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4910 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் முன்னர் தெரிவிக்கையில், எரிவாயு கொல்களன் ஒன்றின் விலையை சுமார் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

எனினும், மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி 50 ரூபாவால் மட்டுமே விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Previous articleதலைக்கவசத்தை எறிந்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரி கைது!
Next articleஇலங்கை வரும் இந்திய படையினர் ?