இலங்கை வரும் இந்திய படையினர் ?

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் துறைகளில் ஊகச் செய்திகளை நிராகரிப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் , இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜனநாயக அமைப்புகள் மற்றும் மதிப்புகள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்று உயர் ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

அதேவேளை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ ஆகியோர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என பா.ஜ.க. வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

அவர் தனது டிவிட்டரில், “கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்படியானால் நமது அயலவனாக உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்ஷவினர் கோரும் போது நாங்கள் வழங்கத் தயார் என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்த நிலையில் மேற்கண்டவாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.